காசநோய் கருத்தரங்கு

சோழவந்தான் : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் உலக காசநோய் தின கருத்தரங்கு சுகாதார, பொருளாதார தாக்கங்கள் என்ற தலைப்பில் நடந்தது.

மதுரையில் உள்ள கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். பொருளியல் துறை தலைவர் சதீஷ்பாபு வரவேற்றார்.

சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக சுகாதார பொருளியல் துறை தலைவர் முனியாண்டி, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் மகேஷ்குமார் ஆகியோர் இந்தியாவில் காசநோயை ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனப் பேசினர்.

ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் அருள்மாறன், அசோக்குமார், சாமிநாதன் செய்தனர். ஒருங்கிணைப்பாளர் தினகரன் நன்றி கூறினார்.

Advertisement