பள்ளி - கல்லுாரி வித்தியாசம் 'தெரியாத' நெடுஞ்சாலைத்துறை

திருப்பூர், பல்லடம் ரோட்டில், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரி வாயிலில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், 'பள்ளி வளாகம் அருகே அமைந்துள்ளது; மெதுவாகச் செல்லவும்' என எழுதப்பட்டுள்ளது. அதற்கு சில மீட்டர் துாரத்தில், எல்.ஆர்.ஜி., கல்லுாரி என்ற அறிவிப்பு பலகை உள்ளது.

கல்லுாரி மாணவியர் கூறுகையில், 'கடந்த, 1971 முதல் இக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் முதல் அரசு கல்லுாரி இது தான். சென்னை குயின்மேரீஸ் கல்லுாரிக்கு அடுத்து, மாநிலத்தில் அதிகளவு மாணவியர் படிக்கும் கல்லுாரியாக எல்.ஆர்.ஜி., கல்லுாரி உள்ளது.

கல்லுாரி வாயிலில், பலர் பார்வைக்கு படும் வகையில் 'பள்ளி வளாகம் அருகே அமைந்துள்ளது' என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். விபரம் அறியாமல் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை மாற்ற வேண்டும். 'மகளிர் கல்லுாரி உள்ளது' என அறிவிப்பு வைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement