பாராட்டு விழா 

சேத்தியாத்தோப்பு, சேத்தியாத்தோப்பில் ஊரக ஊர்க்காவல் படை தளபதிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

ஊர்க்காவல்படை முன்னாள் தளபதி தில்லைசேகரன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், ஊர்க்காவல் படை உதவி தளபதி குருநாதன் முன்னிலை வகித்தனர்.

உதவி தளபதி தவச்செல்வன் வரவேற்றார். டி.எஸ்.பி., விஜிகுமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி, பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் பேசினர்.

Advertisement