பாதம் பாதுகாப்பு இனி பயம் இல்லை

திருப்பூர்; அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் 'பாதம் பாதுகாப்போம்' சிகிச்சை துவங்கப்படுமென சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்தளம், புறநோயாளிகள் ஒப்புகைச்சீட்டு வழங்குமிடத்தில் இதற்கான அறிவிப்பு, விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

''கால் பாதிப்புக்கும், சாதாரண கால் பாதிப்புக்கும் வித்தியாசம் உள்ளது. நரம்பு உணர்விழப்பு, பாத புண் பாதிப்பு, ரத்த ஓட்டத்தில் குறை, கிருமித்தொற்று உள்ளிட்டவை சர்க்கரை நோயாளிகளுக்கான அறிகுறிகள்'' என அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

காலணி அணிவதன் முக்கியத்துவம், காலணி அணியாததால் ஏற்படும் பிரச்னை குறித்து நோயாளிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. கால்சார்ந்த பாதிப்புகளுக்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை துவங்கினால், பிரச்னைகளை தவிர்க்கலாம். கால்வலியை போக்க சுடுநீர் ஒத்தடம், காலில் புண் ஏற்பட்டால் சுய வைத்தியம், காலில் சுண்ணாம்பு, விபூதி, சாம்பல் மற்றும் சாணி பூசுவது விளைவுகளை உண்டாக்கும். அதீத கால்வலி ஏற்படும் வரை காத்திருக்காமல் அறிகுறிகள் தெரியும் போது வந்தால், பாதிப்புகளை ஆரம்பத்திலேயே குறைத்துக் கொள்ளலாம்.

Advertisement