மரக்காணம் ஒன்றிய கூட்டம்

மரக்காணம் : மரக்காணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.

சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், சிவநேசன் முன்னிலை வகித்தனர். துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கவுன்சிலர் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:

கூனிமேடு ஊராட்சி 12 வார்டுகள் கொண்டது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அடுத்த ஊராட்சி தேர்தலின்போது இது அதிக்ககூடும். இதனால் நிர்வாக வசதி கருதி கூனிமேடு ஊராட்சியை இரண்டு ஊராட்சிகளாக பிரிக்க வேண்டும். கீழ்புத்துப்பட்டு ஊராட்சியையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.

சேர்மன் தயாளன் பேசுகையில்,'ஆய்வுக்குப் பிறகு அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தொடர்ந்து, கூனிமேடு மற்றும் கீழ்புத்துப்பட்டு ஊராட்சிகளை 4 ஊராட்சிகளாக பிரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement