தொழில் நுட்பங்களால் வகுப்பறை சூழல் மாறபோகுது பேராசிரியர் பிரசன்னகுமார்

புதுச்சேரி : தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் சென்னை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பிரசன்னகுமார் பேசியதாவது:
கணினி அறிவியல் துறையில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, மெஷின் லேர்னிங் , பிளாக் செயின், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகள் தற்போது உலகளவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
கோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்தால் ஏ.ஐ., இன்ஜினியரிங், வெப்டெவலப்பர், அப்ளிகேஷன், கிளவுட் டெவலப்பர் செல்ல முடியும்.
செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அடுத்தடுத்த ஆராய்ச்சி வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது.
நிதி, பங்கு சந்தை, சில்லறை வணிகம், ஆட்டோ மொபைல், முக அங்கீகார தொழில்நுட்பம், போக்குவரத்து, ரோபோட்டிக்கு சர்ஜரி நுழைந்துவிட்டது.
சாட்ஜிபிடி கற்பனை வளத்துடன் யோசிக்கிறது. நமக்கு பதில்களையும் நொடியில் தருகிறது. இது மாதிரி நிறைய டூல்ஸ் இன்று வந்துவிட்டன. சாட்ஜிபிடி வந்ததால் மாணவர்களின் கற்றல் குறைந்துவிட்டது என்கின்றனர். ஆனால், சாட்ஜிபிடி பயன்படுத்தும் மாணவர்களின் கற்றல் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஆசிரியர்கள் கொடுக்கும் கேள்விகளை சாட்ஜிபிடியிடம் கொண்டு பதிலை பெற்றால் எந்த வகையிலும் கற்றலுக்கு உதவாது. அதனை மாணவர்கள் ஆக்கபூர்வமாக கற்றலுக்கு பயன்படுத்த வேண்டும். சாட்ஜிபிடி ஆசிரியர்களுக்கு கற்பிற்கும் வெகு தொலைவில் இல்லை. ஸ்மார்ட் வகுப்பறையிலும் அதனுடைய தாக்கம் இருக்கும். விர்ச்சூவல் ரியல்டி போன்று வகுப்பறைகள் எதிர்காலத்தில் மாறும். வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்றல் ஒரே மாதிரி இருக்கலாம்.
சாட்ஜிபிடி தொழில்நுட்பம் வகுப்பறையில் புகும்போது, மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப கற்பிக்கும். சராசரி மாணவர்களுக்கு ஒரு மாதிரியும், வேகமாக கற்கும் மாணவர்களுக்கு வேறு மாதிரியும் பாடம் போதிக்கும். இதனால் வகுப்பறையின் கற்றல் சூழலே செயற்கை நுண்ணறிவினால் மாறும்.
கொரோனா உலகை புரட்டி போட்டது. ஆனாலும் ஓரிரு மாதங்களில் வேகமாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவு தான்.
கால்குலேட்டர் கண்டுபிடிக்கப்பட்டபோது கூட அதை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. கம்ப்யூட்டர் வந்தபோது இப்படி தான் எதிர்ப்பு எழுந்தது.
இன்றைக்கு கால்குலேட்டர், கம்ப்யூட்டர் இல்லாத இடமே இல்லை. இதனால் ஏ.ஐ.., தொழில்நுட்பம் யாருக்கும் பதிலாக வரவில்லை. ஏ.ஐ., தொழில்நுட்பம் பல வாய்ப்புகளை மனிதகுல வளர்ச்சிக்கு திறந்து விட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்