2 கி.மீ., - 12 வேகத்தடைகள்; பாகங்கள் கழலும் வாகனங்கள்

பல்லடம் -பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், காமநாயக்கன்பாளையம்,- சுல்தான்பேட்டை வரை சமீபத்தில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இந்த ரோட்டில், 2 கி.மீ., துாரம், 12 வேகத்தடைகளும், இதேபோல், எதிர் திசையில், 11 வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகள் மிகுந்த தடிமனாக உள்ளது.
சுல்தான்பேட்டை வட்டார பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பிய மனு:
வழக்கமாக அமைக்கப்படும் வேகத்தடைதான் என்று நினைத்து, அதே வேகத்தில் ரோட்டை கடக்கும் போது, வாகன வீல்களில் உள்ள போல்டு - நட்டுகள் கழன்று, கண்ணாடிகள் உடையக்கூடிய சூழல் ஏற்படுகிறது. கனரக வாகனங்களில் 'லீப் கட்' உடைகிறது.
ஆம்புலன்ஸ்கள் கூட வேகத்தடையால் தடுமாறுகின்றன. நெடுஞ்சாலைகளில், வேகத்தடைகள் அமைக்க கட்டுப்பாடு உள்ள நிலையில், எதற்காக வெறும், 2 கி.மீ., துாரத்துக்கு இவ்வளவு வேகத்தடைகள்? இவற்றை அகற்ற வேண்டும்.


மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்