'கொடை'யில் கட்டுப்பாட்டு மையம்
கொடைக்கானல் : கொடைக்கானலில் சீசனுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் சரவணன் கூறியதாவது: கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் வசதி இல்லாத நிலை, அடிப்படை வசதிகள் நிறைவேற்றுதல் உள்ளிட்ட நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சில வாரங்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தற்போதைய பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட், ரோஜா பூங்கா பகுதியில் தற்காலிக பார்க்கிங் வசதி ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. கோக்கர்ஸ்வாக் ,பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோர பள்ளங்கள் சீர் செய்யப்பட்டு பார்க்கிங் வசதி செய்யப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் குறைகள் களையப்பட உள்ளது. நகராட்சியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டிற்கு வருகிறது. போலீசார் அறிவுறுத்தும் பகுதியில் மட்டுமே பார்க்கிங் செய்ய வேண்டும். மீறுவோர் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வாட்டர் ஏ.டி.எம். 25 இடங்களில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்