ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல், தேனி தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் விளையும் காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விற்பனையாகும் காய்கறிகளில் 70 சதவீதத்திற்கும் கூடுதலாக கேரளா வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.


ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று வியாபாரிகள் காய்கறிகள் கொள்முதல் செய்யும் அளவை மிகவும் குறைத்தனர். வெண்டை, பயறு உள்ளிட்ட பல காய்கறிகள் விலை படு வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.


2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.15க்கு விற்ற வெண்டைக்காய் நேற்று ரூ.5 க்கு, ரூ.12 க்கு விற்ற பச்சை பயறு ரூ.7 க்கு விற்பனை ஆனது. சுரைக்காய் கிலோ ரூ.3 க்கு, பீட்ரூட் ரூ.3 க்கு, கரும்பு முருங்கைக்காய் ரூ.10 க்கு, செடி முருங்கைக்காய் ரூ.7 க்கு, மரம் முருங்கை ரூ.6 க்கு விற்றன. இருந்த போதிலும் தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகரித்து கிலோ ரூ.7 முதல் 12 வரை விற்பனை ஆனது.

Advertisement