சூரிய நிறுவன உதவி மேலாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு நிறைவு

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மாசுக்கட்டுப்பாடு குழுமம், சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணர்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் 'சூரிய நிறுவன உதவி மேலாளர்' சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் கடந்த ஜன., 8ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடந்தது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நிதி உதவியுடன், பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சி வகுப்புகள் நிறைவு விழா, அப்துல்கலாம் அறிவியல் மையத்தில் நடந்தது.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பொறியாளர் காளமேகம் வரவேற்றார். புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பங்கேற்று, பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்கள் நிபுணர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணர்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்ட அலுவலர் நித்தியா நன்றி கூறினார்.
இதில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாடு குழுமத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.