கருத்தரங்கு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் ஆங்கில முதுகலைத் துறை சார்பில் ஆங்கில இலக்கியத்தில் புவி- இடஞ்சார்ந்த தன்மை என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.

முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து கருத்தரங்கு மலரை வெளியிட்டார். ஆங்கிலத் துறைத் தலைவர் சத்தியவதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக மத்திய பல்கலை ஆங்கில உதவிப் பேராசிரியர் மகேந்திரா, ஜதராபாத் மவுலானா ஆசாத், உருது பல்கலை ஆங்கில உதவிப்பேராசிரியர் கீதா ஆகியோர் புவி-இடஞ்சார்ந்த தன்மை என்ற தலைப்பில் விரிவாக பேசினர்.

தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளித் தாளாளர் ராஜாத்தி வாழ்த்தினர். ஆங்கில உதவிப் பேராசிரியர் சேக் அயாஸ் அகமது நன்றி கூறினார்.

Advertisement