விபத்தில் காயம்

தேனி : கடமலைக்குண்டு போஸ்ட் ஆபிஸ் தெரு தினேஷ்குமார் 23. தேனியில் நகைக்கடையில் பணிபுரிகிறார். இவர் கோடாங்கிபட்டி சென்று பைபாஸ் ரோட்டில் தேனி திரும்பினார். அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே வந்த போது போடி கவியரசன் 33, ஓட்டி வந்த டூவீலர் தினேஷ்குமார் டூவீலரின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த தினேஷ்குமார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement