திருமுருகநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி வேள்வி

அவிநாசி; கொங்கேழு சிவ தலங்களில் ஒன்றான, திருமுருகன் பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில், சனிப்பெயர்ச்சி யாக வேள்வி விழா நடைபெற்றது.பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை ஆகியவை நடந்தன. சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement