மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வீணாகும் தேக்குக்கட்டைகள்

கம்பம், : கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தேக்கு கட்டைகள் வீணாகி வருகின்றன.

கம்பம் பகுதியில் கடந்த 1990 களில் வனப்பகுதியில் மரம் வெட்டும் கும்பல் மரங்களை வெட்டி கடத்தியது. அப்போது அவ்வளவாக கெடுபிடிகள் இல்லை. ஆனால் 1992 களில் கம்பம் வனச்சரகராக பணியில் இருந்த ராஜலிங்க ராஜா, மரம் வெட்டும் கும்பலுடன் மல்லுக்கட்டினார். 1994ல் கம்பம், கூடலுாரில் மரம் வெட்டும் கும்பலின் வீடுகளுக்குள் இருந்த - தேக்கு கட்டைகளை போலீஸ் உதவியுடன் பறிமுதல் செய்தார்.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தேக்கு கட்டைகள் கம்பம் வனச்சரக அலுவலக வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டன. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக்கூறி, தேக்கு கட்டைகளை ஏலம் விட முடியவில்லை.- கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மழையில் நனைத்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. பல கட்டைகள் காணாமல் போய்விட்டதாகவும் தெரிகிறது. கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து, தேக்கு கட்டைகளை ஏலம் விட்டு அரசிற்கு வருவாய் கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement