விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சேக் முகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கண்ணன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் கண்ணன், முனியாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement