விளையாட்டு, கலைநிகழ்ச்சி களைகட்டிய 'யுகாதி' திருநாள்

திருப்பூர்; தெலுங்கு மொழி பேசும் தமிழர் பேரமைப்பின் சார்பில், யுகாதி பெருவிழா திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ரவிக்குமார் வரவேற்றார். பொம்முசாமி, சீனிவாச ரெட்டி, செல்வராஜ், சிவசாமி, ரஞ்சித்குமார், மூர்த்தி, ராஜன், நாகேந்திரன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், வாவிபாளையம் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக மதியம் குழந்தைகள் மற்றும் மகளிருக்கான விளையாட்டு போட்டி நடந்தது. மகளிருக்கு, பலுான் ஊதி உடைத்தல், சோடா பாட்டில் தண்ணீர் நிரப்புதல், நெற்றியில் பொட்டு ஒட்டுதல், மியூசிக்கல் சேர், சைகை செய்து கண்டுபிடிக்கும் போட்டி; சிறுவர், சிறுமியருக்கு நம்பர் கேம், மாறுவேடம், லெமன் ஸ்பூன் ஆகிய போட்டிகள் நடந்தன. ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சி, தேவராட்டம் நடந்தது.
மேலும்
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது