விழிப்புணர்வு

சங்கராபுரம்: சங்கராபரம் அடுத்த அரசம்பட்டியில் தென்னை மர விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யராஜ் பேசியதாவது:

வட்டாரத்தில், 200 ஏக்கர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் அந்த மரங்களில் வெள்ளை சுருள் ஈக்களால்மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

விளக்கு பொறி, ஏக்கருக்கு 2 வீதம் இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை வைத்தால் வெள்ளை ஈக்கள் அழிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement