மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
ஈரோடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
வீட்டுமனை பட்டா, அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுக்கு கடனுதவி, பணி நியமனம், உயர் ஆதரவு தொகை, தொகுப்பு வீடுகள் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 62 மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கைக்கு அறிவுறுத்தினர். தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி சென்னையில் நடந்தது. இதற்கான தமிழக அணியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எட்டு பேர் பங்கேற்று முதல் பரிசை பெற்றனர். அவர்களை கலெக்டர் கவுரவித்தார். காசிபாளையம் பகுதியை சேர்ந்த நிர்மலா தேவி என்ற மாற்றுத்திறனாளிக்கு கைபேசி வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டில்லி பயணம் குறித்து கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
-
வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement