பெண் சவகாசம் வாலிபருக்கு கத்திக்குத்து
துரைப்பாக்கம், வேளச்சேரி, பவானி தெருவைச் சேர்ந்த ஜீவரத்தினம், 27. பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் அப்பு, 24. இருவர் மீதும், பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்தபோது நண்பர்களாக பழகினர்.
நேற்று முன்தினம் இரவு, அப்புவின் வீட்டில் ஜீவரத்தினம் உள்ளிட்ட ஆறு நண்பர்கள் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். ஏற்கனவே, அப்புவின் உறவினர் பெண்ணிடம், ஜீவரத்தினம் தவறாக பழகியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பு, மது அருந்தும் ஜீவரத்தினத்திடம் தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஐந்து பேரும் சேர்ந்து ஜீவரத்தினத்தை கத்தியால் சரமாரியாக குத்தினர். பலத்த காயமடைந்த ஜீவரத்தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விசாரித்த துரைப்பாக்கம் போலீசார், நேற்று அப்பு உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement