சாலை தடுப்பில் சாய்ந்த மின்கம்பம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

திருவள்ளூர்:சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் செங்குன்றம் பகுதியில் இருந்து திருத்தணி, திருப்பதி, ஊத்துக்கோட்டை செல்லும் வாகனங்கள், ஜே.என்.சாலை, காமராஜர் சிலை சந்திப்பில் இருந்து சி.வி.நாயுடு சாலை வழியாக பயணிக்கின்றன.

பெரியகுப்பம் ரயில் நிலையம் மற்றும் மணவாளநகர் மேம்பாலம் ஆகிய பகுதியில் இருந்து, ஜே.என்.சாலை மற்றும் சி.வி.நாயுடு சாலையில் டோல்கேட் வரை அகலப்படுத்தப்பட்டு, நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. சாலை நடுவே அமைக்கப்பட்ட தடுப்புச்சுவரில், ஆங்காங்கே நகராட்சி சார்பில் கம்பம் அமைத்து, மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு, இந்த மின்விளக்கு வசதியாக இருந்தது.

நேற்று முன்தினம் இரவு, காமராஜர் சிலை சந்திப்பில் இருந்து சி.வி.நாயுடு சாலை வழியாக செல்லும் வழியில் உள்ள சாலை தடுப்புச்சுவரில் அமைக்கப்பட்ட மின்கம்பம், ஆபத்தான முறையில் சாய்ந்து கிடக்கிறது. இதனால், இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement