குளத்தில் மூழ்கி தாய், மகன் பலி

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு நென்மேனி கல்லேரிப்பொற்றையைச் சேர்ந்த, லாட்டரி தொழிலாளி கலாதரன் மனைவி பிந்து, 46. இவர்கள் மகன் சனோஜ், 11; அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார்.

இவர்கள், நேற்று காலை கொடுகப்பாறையில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர். குளத்தில் இறங்கியதும், பிந்துவுக்கு கால், கை வலிப்பு ஏற்பட்டது. இதனால், நிலை தடுமாறி ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கினர்.

இதைக் கண்ட மகன், தாயை காப்பாற்ற முயன்றபோது, குளத்தில் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினார்.

உறவினர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement