எலுமிச்சை விலை சரிவு விவசாயிகள் கவலை

புதுக்கோட்டை:தமிழகத்திலேயே திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், திருச்சியில் மணப்பாறையிலும் எலுமிச்சை பழம் அதிகளவு விளைச்சல் உள்ளது.

ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட கீரமங்கலம், கொத்தமங்கலம், அணவயல், எல்.என்.புரம், புள்ளான்விடுதி, நெடுவாசல், வடகாடு உட்பட இதர பகுதிகளிலும் விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன், நாளொன்றுக்கு 5 -- 10 டன் எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. சில மாதங்களுக்கு முன், பனிக்காலத்தில் கூட ஒரு கிலோ எலுமிச்சை பழங்கள் ரூபாய் 70 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தன.

சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையிலும், விளைச்சல் அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ எலுமிச்சை 25 -- 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement