வர்ணம் பூசாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கடம்பத்துார்:திருவள்ளூர் - கடம்பத்துார் நெடுஞ்சாலையில் திருப்பாச்சூர், பிரையாங்குப்பம், கடம்பத்துார் அமைந்துள்ளது.

இந்த நெடுஞ்சாலையிலிருந்து விடையூர், சேலை, வெண்மனம்புதுார் ஆகிய பகுதிகளுக்கு ஒன்றிய சாலைகள் பிரிந்து செல்கின்றன.

இந்த நெடுஞ்சாலை வழியே, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இச்சாலையில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement