அதிகாரிகள் வராததால் வாய்க்காலில் விடப்பட்ட மனுக்கள்
அதிகாரிகள் வராததால் வாய்க்காலில் விடப்பட்ட மனுக்கள்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கள்ளப்பள்ளி பஞ்சாயத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு, பஞ்., செயலாளர் வராததால், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வாய்க்காலில் விட்டனர்.
கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட கள்ளப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. யூனியன் அதிகாரிகள், பஞ்., செயலாளார்கள் மற்ற பஞ்சாயத்துகளில் நடக்கும் கிராம சபை கூட்டத்திற்கு சென்றததால், இதர அரசுத்துறை அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இங்குள்ள தற்காலிக பணியாளர்களை கொண்டு உலக தண்ணீர் தினம் குறித்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, கருப்பத்துாருக்கு கடந்த சில வாரங்களாக காவிரி நீர் வருவது இல்லை. இந்த பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை எழுதி கொண்டு வந்தனர். அப்போது மனுக்கள் வாங்க யூனியன் நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து செயலாளர் வராததால், லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் அருகில் செல்லும் கட்டளை தென்கரை வாய்க்கால் தண்ணீரில் மனுக்களை விட்டனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
-
விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., போராட்டம்