மத்திய அரசை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்



மத்திய அரசை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்


குளித்தலை:நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், நிதி வழங்காமல் உள்ள மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
குளித்தலை அடுத்த, வைகைநல்லுாரில் குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர்கள், 100 நாள் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேற்கு ஒன்றியம் சார்பில் இனுங்கூர் பஞ்., அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய செயலர் தியாகராஜன் தலைமை வகித்தார். இதேபோல் ராஜேந்திரம். இரணியமங்களம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
* நெரூர் வடபாகம் பஸ் ஸ்டாப்பில், தி.மு.க., சார்பில் 100 நாள் தேசிய வேலை உறுதி திட்டத்தில் நிதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். தமிழகத்திற்கு, ரூ.4,034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை, மத்திய அரசு வழங்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபோல பல பஞ்சாயத்துகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.முக., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார். வேங்காம்பட்டி கடை வீதி, லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி கடை வீதி, பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம் சார்பில், மாயனுார், சித்தலவாய் மற்றும் கிருஷ்ணராயபுரம் கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவிராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement