சேவல் சண்டைநடத்திய 5 பேர் கைது:சேவல்கள், கத்தி பறிமுதல்



சேவல் சண்டைநடத்திய 5 பேர் கைது:சேவல்கள், கத்தி பறிமுதல்


கரூர்:வெள்ளியணை அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., தமிழ் செல்வன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், அம்மாப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, சேவல் சண்டை நடத்தியதாக தான்தோன்றிமலை விஷ்ணு, 29; வெள்ளியணை சமத்துவபுரம் தனசேகர், 30; சதீஷ், 35; கரூர் அரசு காலனி கோவிந்தராஜ், 31; பசுபதிபாளையம் சிவக்குமார், 35; ஆகிய, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்த, 11 ஆயிரத்து, 220 ரூபாய், எட்டு டூவீலர்கள், நான்கு சேவல்கள், சேவல் கால்களில் கட்டப்படும், ஒன்பது கத்திகளையும், வெள்ளியணை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement