மாநகராட்சியில் நடந்த பகுதி சபை கூட்டங்கள்


மாநகராட்சியில் நடந்த பகுதி சபை கூட்டங்கள்


ஈரோடு:ஈரோடு மாநகராட்சி ஒன்றாவது மண்டலம், ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட ராயபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பகுதி சபை கூட்டம் நடந்தது.
கவுன்சிலர் ஜமுனா ராணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பாதாள சாக்கடை குழாயில் ஏற்படும் குளறுபடிகளை சீரமைக்க வேண்டும். முறையாக குடிநீர் வழங்க வேண்டும். விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும். வரியினங்களை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
மூன்றாவது மண்டலம், 34வது வார்டு எஸ்.கே.சி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கவுன்சிலர் ரேவதி தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். மேயர் நாகரத்தினம், துணை கமிஷனர் தனலட்சுமி, தலைமை பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரண்டாவது மண்டலம், 37வது வார்டு காமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கவுன்சிலர் தீபலட்சுமி தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது. நான்காவது மண்டலம், 57வது வார்டு கவுன்சிலர் ராமலிங்கம் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.

Advertisement