இ-பாஸ் ரத்து கோரி வணிகர்கள் கருப்பு கொடி போராட்டம்

ஊட்டி,:நீலகிரியில்அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரி வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; ஏப்., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்; சில்ஹல்லா நீர் மின் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை முதல், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், குந்தா ஆகிய தாலுகாக்களில், 5,000 திற்கும் மேற்பட்ட வணிகர்கள், கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி, கருப்பு சட்டை அணிந்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் குலசேகரன் கூறுகையில், ' நீலகிரியில்அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரி வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஏப்., 2ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.'' என்றார்.

Advertisement