தாமிரபரணியில் மூழ்கி குழந்தை, பெண் இறப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே ஒய்யாங்குடியைச் சேர்ந்த லாரன்ஸ், மேட்டுப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். சர்ச் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக சில நாட்களுக்கு முன் லாரன்ஸ், அவரது மனைவி கிளாடிஸ் ரேபேகா, 45, சொந்த ஊர் வந்தனர்.

இதேபோல, சென்னை, பெருங்களத்துார் சரண்குமார், அவரது மனைவி ஸ்டெபி புஷ்பா, குழந்தை அவினா, 5, ஆகியோரும் வந்திருந்தனர். கிளாடிஸ் ரேபேகாவும், ஸ்டெபி புஷ்பாவும் சகோதரியர்.

லாரன்ஸ் மற்றும் குடும்பத்தினர் ஏழு பேர் நேற்று ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். கிளாடிஸ் ரெபேகா ஆற்றில் இறங்கியபோது, சிறுமி அவினாவும் அவருடன் ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்.

எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கினர். கரையில் நின்ற பாலினா கிரேஸி, 20, என்ற பெண் அவர்களை மீட்க முயன்றார். அவரும், நீரில் மூழ்க, உறவினர்கள் மூவரையும் மீட்க முயற்சித்தனர். பாலினா கிரேஸி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். கிளாடிஸ் ரெபேகா, அவினா சடலமாக மீட்கப்பட்டனர்.

Advertisement