'சில்மிஷ' எச்.எம்., தலைமறைவு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சுந்தரவிநாயகம், 50, தற்காலிக ஆசிரியர்களாக இருவர் பணிபுரிகின்றனர். சுந்தரவிநாயகம் தினமும் போதையில் பள்ளிக்கு வருவார். பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவியரை அழைத்து, மடிமீது அமரவைத்து மொபைல்போனில் ஆபாசப் படங்களை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூறினார். பெற்றோர், செங்கம் வட்டாரக் கல்வி அலுவலர் ஷகிலாவிடம் புகார் கொடுத்தனர். விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டதால், சுந்தர விநாயகம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். செங்கம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சுந்தரவிநாயகத்தை தேடி வருகின்றனர்.

Advertisement