கார் - ஆட்டோ மோதி விபத்து பெண்கள் உட்பட மூவர் மரணம்
பேரையூர்:பேரையூர் அருகே கார் - ஆட்டோ மோதியதில், நெல் நடவு செய்ய வந்த இரு பெண்கள் உட்பட மூன்று கூலி தொழிலாளிகள் பலியாகினர்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, எ.பாரைப்பட்டி பகுதியில் நெல் நடவுப் பணிகள் நடக்கின்றன. இதற்காக, விருதுநகர் மாவட்டம், வத்ராப் நெடுங்குளம் பகுதி கூலி தொழிலாளர்கள், 10 பேருக்கு மேல் ஆட்டோவில் ஏ.பாரைப்பட்டிக்கு நேற்று காலை வந்தனர். பணிகளை முடித்துவிட்டு மாலை, 4:00 மணி அளவில் ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டனர்.
திருமங்கலம்- - ராஜபாளையம் ரோட்டில் பாரைப்பட்டி விலக்கருகே சென்னையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கிச் சென்ற கார் ஆட்டோவின் பின்புறம் மோதியதில், தங்கம்மாள், 45, அருஞ்சுணை, 50, ராமர், 60, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
நான்கு பேர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கார் டிரைவர் சென்னை அசோக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காவலர் மீது ஆந்திர பக்தர்கள் தாக்குதல்
-
கொள்ளிடத்தில் மணல் அள்ள அனுமதிக்கு தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
-
10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்; தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்
-
பத்திரங்களை பதிவு செய்வதற்கு புதிய நடைமுறைகள் அறிவிப்பு
-
ஏப்ரலில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
-
கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்துகள் வழங்காதீர்: மத்திய அரசு