தடுப்பு இன்றி காணப்படும் கண்டிவாக்கம் குளம்

கண்டிவாக்கம்:மதுரமங்கலம் அடுத்த, கண்டிவாக்கம் கிராமத்தில் இருந்து, ஒரகடம் மகாதேவிமங்கலம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், எட்டு இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடைகள் இல்லை.
சமீபத்தில், 82.42 லட்ச ரூபாய் செலவில், 2.25 கி.மீ., துாரத்தை முதல்வர் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் புதிய சாலை போடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாகன ஓட்டிகள் அசுர வேகத்தில் செல்கின்றனர்.
குறிப்பாக, கண்டிவாக்கம் கிராமம் அருகே, சாலை வளைவில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை. அசுர வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் குளத்தில் தடுப்பு இன்றி நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது.
எனவே, கண்டிவாக்கம் - ஒரகடம் மகாதேவிமங்கலம் இடையே சாலை வளைவில் இருக்கும் குளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை தாண்டியது!
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை