கரும்பு ஜூஸ் கடையில் போதை பொருள் விற்றவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த, மொளச்சூர் பகுதியில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, மொளச்சூர் கருமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கரும்பு ஜூஸ் கடையில், போலீசார் நேற்றுமுன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், நான்கு கிலோ விமல்' எனும் போதை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின், 21, என்பவரை, கைது செய்தனர்.

Advertisement