தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்:தமிழகத்திற்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தர வேண்டிய, 4,034 கோடி ரூபாய் நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து, உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஒன்றிய தி.மு.க., செயலர் குமார் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, கண்டன உரையாற்றினார்.

இதேபோல, படூர் கூட்டுச்சாலை, எஸ்.மாம்பாக்கம் கூட்டுச்சாலை, உத்திரமேரூர், தண்டரை, ஆதவப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர், வாலாஜாபாத் பேரூராட்சி செயலர் பாண்டியன் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் சஞ்சீவ்காந்தி பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

இதேபோன்று அய்யம்பேட்டை, தம்மனுார் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement