போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற விநாயகர் சிலை 

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடை கண்மாய் கரையில் திடீரென வைக்கப்பட்டிருந்த விநாயகர் கல் சிலையை போலீசார் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.மேதலோடை கண்மாய் கரையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் 2 அடி உயரமுள்ள விநாயகர் கற்சிலையை கொண்டு வந்து வைத்துள்ளனனர். இது குறித்து மேதலோடை கிராம மக்கள் திருப்புல்லாணி போலீசாருக்கு தெரிவித்தனர்.

திருப்புல்லாணி போலீசார் விநாயகர் சிலை குறித்து விசாரணை செய்தனர். யார் வைத்தது, எதற்காக வைக்கப்பட்டது என தெரியவில்லை. இதனால் சிலையை போலீசார் திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement