போதையில் இளைஞர் தாக்கியதில்மூதாட்டி மயங்கி விழுந்து பலி
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் கீழவாணியங்குடியில் போதையில் இளைஞர் தாக்கியதில் மூதாட்டி மயங்கி விழுந்து இறந்தார். இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கீழவாணியங்குடியைச் சேர்ந்தவர் வீரமணி 45. இவரது மகள் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டில் இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் வடிவேலு 34, விசிலடித்து தகாத வார்த்தைகளால் பேசி கலாட்டா செய்தார். வீரமணி மகள் வடிவேலு வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடம் கண்டிக்கும்படி கூறினார். இதனால் ஆத்திரமுற்ற வடிவேலு அப்பெண்ணை தாக்கியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வீரமணி தாயார் ஆனந்தவள்ளி 72, வந்து தடுத்துள்ளார். அவரை தகாத வார்த்தைகளால் பேசி வடிவேலு தாக்கினார். இதனால் ஆனந்தவள்ளி மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஆனந்தவள்ளியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து ஆனந்தவள்ளி இறந்து விட்டதாக கூறினார்.
வீரமணி இது குறித்து சிவகங்கை போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தைப்புரிந்ததாக வடிவேலு மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி