கிராம சபை கூட்டம் எனக்கூறி ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துறீங்க அமைச்சரிடம் பா.ஜ.,பெண் நிர்வாகி கேள்வி

அருப்புக்கோட்டை:100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசைக்கண்டித்து நேற்று காலை 10:15 மணிக்கு விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் ஊராட்சி அலுவலகம் முன் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்ட முடிவடையும் நேரத்தில் பாலவநத்தத்தை சேர்ந்த வடக்கு ஒன்றிய பா.ஜ., துணைத்தலைவர் மீனா அமைச்சரிடம், 'இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் அறிவிக்கப்பட்டதை ஏன் ஆர்ப்பாட்டமாக நடத்துறீங்க என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் ''கிராம சபை கூட்டம் 11:00 மணிக்கு மேல் தான் நடக்கும்'' என கூறிவிட்டுச் சென்றார். அங்கிருந்த பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் நாகராஜன் ''100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 35 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளது ''என பலத்த குரலில் கூறினார். போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி