மடப்புரம் கோயில் ரூ.10 கோடி நிலம் மீட்பு மதிப்பிலானது
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலங்களை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மார்கழி பூஜைக்காக நிலக்கோட்டை சோலைக்குறிச்சி போர்த்தி நாடார், சி.காத்தார் நாடார், சுப்பையா நாடார், வி.காத்தார் நாடார், சி.தொ.காத்தார் நாடார், வெள்ளைய முக்கந்தர் நாடார் ஆகியோர் 13 ஏக்கர் நிலத்தை 1930ம் ஆண்டு வழங்கினர்.
நாளடைவில் பலரும் போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அவர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து ஆக்கிரமித்திருந்தனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு ஜனவரியில் ஆறு மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்றி நிலங்களை கையகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து சிவகங்கை அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, மதுரை உதவி ஆணையர் வளர்மதி, கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன் ஆகியோர் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம், சோலை குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
பின் அந்த இடங்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகையையும் வைத்தனர்.
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி