சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

திருநெல்வேலி:திருநெல்வேலிமாவட்டம் மானுார் அருகே சாலையோரம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து போலீசார் விசாரித்தனர். அவை அப்புறப்படுத்தப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் ஒதுக்குப்புறமாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது. ஏற்கனவே சுத்தமல்லி, கல்லுார் பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அவை அகற்றப்பட்டன.
நேற்று மானுார் அருகே மதவகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை ஓரம் இரண்டு இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. காலாவதியான மாத்திரைகள், டானிக் பாட்டில்கள், ஊசி மருந்துகள், மருத்துவ சீட்டுகள் குவியல் குவியலாக கிடந்தன.
பல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. இதில் வழக்குப்பதிவு செய்துள்ள மானுார் போலீசார் இதனை கொட்டியவர்களை தேடி வருகின்றனர்.


மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி