பைக் திருட்டு: போலீஸ் விசாரணை

புதுச்சேரி : பைக்கை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன், 26. இவர், கடந்த 27ம் தேதி இரவு தனது பைக்கை (பி.ஒ. 01.டி.பி.6698) வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது பைக்கை காணவில்லை.

புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement