கார் - ஆட்டோ மோதல் பெண்கள் உட்பட மூவர் பலி

பேரையூர், : மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கார்- ஆட்டோ மோதியதில் நெல் நடவு செய்ய வந்த 2 பெண்கள் உட்பட 3 கூலித்தொழிலாளிகள் பலியாகினர்.

பேரையூர் தாலுகா எ.பாரைப்பட்டி பகுதியில் நெல் நடவுப் பணிகள் நடக்கின்றன. இதற்காக விருதுநகர் மாவட்டம் வத்ராப் நெடுங்குளம் பகுதி கூலித்தொழிலாளர்கள் 10 பேருக்கு மேல் ஆட்டோவில் ஏ.பாரைப்பட்டிக்கு நேற்று காலை வந்தனர். பணிகளை முடித்துவிட்டு மாலை 4:00 மணி அளவில் ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டனர்.

திருமங்கலம்- - ராஜபாளையம் ரோட்டில் பாரைப்பட்டி விலக்கருகே சென்னையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கிச் சென்ற கார் -ஆட்டோவின் பின்புறம் மோதியது. இதில் தங்கம்மாள் 45, அருஞ்சுணை 50, ராமர் 60, இறந்தனர். அனஞ்சி 40, கருப்பாயி 48, பாக்கியலட்சுமி 45, சீனியம்மாள் 39, காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கார் டிரைவர் சென்னை அசோக் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement