திறமைகளை வளர்த்து கொண்டால் சாதிக்கலாம் சார்லஸ் காட்வின் உறுதி

புதுச்சேரி : தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டால், சாதிக்கலாம் என சோகோ மனிதவள மேம்பாட்டு அதிகாரி சார்லஸ் காட்வின் பேசினார்.
புதுச்சேரியில் நடந்த தினமலர் நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சியில், வேலை வாய்ப்புகள் குறித்து அவர் பேசியதாவது;
கேம்பஸ் இன்டர்வியூவிற்கு தேவையான முதல் விஷயம் எனர்ஜி தான். மாணவர்கள், இன்றிலிருந்தே கேம்பஸ் இன்டர்வியூவிற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். கடைசி பென்ஞ் மாணவர்கள் தான் சாதனையாளர்களாக இருப்பார்கள். முடியாத ஒன்றை முடித்து காட்டுவதே, சாதனை.
ஒரு துறையை எடுத்தால் நம் பலம் அது தான் என்று நினைக்க வேண்டும். முதலில் ஒரு பிரச்னையை எதிர்கொள்வது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டும். இது எந்த துறைக்கு சென்றாலும் மிகவும் அவசியமானதாகும். இதேபோன்று, கம்யூனிகேஷன் மிக முக்கியம். மொழி என்னும் கம்யூனிகேஷன் என்பது சுலபமே.
வாழ்க்கையில் வெற்றி பெற பல வேலைகள் உள்ளது. பிடித்ததை செய்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம். ஒவ்வொருவரும் தங்களின் திறமைகள், தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும். பயந்தால் சாதிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.