'உஷாரா இருக்காருப்பா...!'

1

கரூரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலதிபர்கள், சங்க தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை போலீசார் நடத்தினர்.

இதில் பேசிய பலரும், கரூர் ரயில்வே ஸ்டேஷன் முதல், சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட சுற்று வட்ட சாலையை, 'அம்மா சாலை' என்றே குறிப்பிட்டனர். அப்போது, குறுக்கிட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த கரூர் மாநகராட்சி மண்டலத் தலைவர் அன்பரசன், 'அம்மா சாலை என எதுவும் கிடையாது. அதற்கு, 'அண்ணா சாலை' என பெயர் மாற்றி, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது' என்றார்.

அவருக்கு பின் பேச வந்த, கரூர் தாலுகா பால் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாமணி பழனிசாமி, அம்மா மற்றும் அண்ணா சாலை என அழைக்காமல், 'அம்மா - அய்யா சாலை' என பேசி முடித்தார்.

இதை கேட்ட ஒருவர், 'எந்த கட்சியையும் பகைச்சுக்க வேண்டாம்னு ராஜாமணி பழனிசாமி உஷாரா இருக்காருப்பா...' எனக் கூற, சுற்றி இருந்தவர்கள் கமுக்கமாக தலையசைத்தனர்.

Advertisement