வீடு புகுந்து 29 போன் திருடிய 'பலே' திருடர்கள் இருவர் கைது
திருவேற்காடு:திருவேற்காடு, கீழ் அயனம்பாக்கம், இந்திரா காந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் 30 பேர் தங்கி, வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த மார்ச் 2ம் தேதி இரவு, கதவை திறந்து வைத்து துாங்கி கொண்டிருந்தனர். காலை எழுந்து பார்த்தபோது, 15 மொபைல் போன்கள் மற்றும் ஐந்து மணி பர்ஸ் திருடு போனது தெரிந்தது.
அதேபோல், திருவேற்காடு, கோலடி பிரதான சாலையில் சாம்சங் ஏசி சர்வீஸ் சென்டர் உள்ளது. அங்கு, 40 நபர்கள் ஒன்றாக தங்கி இருந்தனர். கடந்த 20ம் தேதி இரவு, கதவை திறந்து வைத்து துாங்கினர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது 14 மொபைல் போன்கள் திருடு போனது தெரிந்தது.
இது குறித்து விசாரித்த திருவேற்காடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், 27, திருச்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன், 36, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 26 மொபைல் போன்கள் மற்றும் 3 'லேப்டாப்' பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும்
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ
-
பஞ்சாப் அணி கலக்கல் ஆட்டம் * லக்னோ அணி தடுமாற்றம்