குழாய் உடைப்பால் சாலையில் ஓடிய குடிநீர்

வளசரவாக்கம்,:வளசரவாக்கம் மண்டலம், 149வது வார்டில், ராதாகிருஷ்ணன் சாலை உள்ளது. இது, வளசரவாக்கம், நெற்குன்றம் பகுதிகளை இணைக்கிறது.

இச்சாலை வழியாக, அப்பகுதியில் உள்ள உட்புற தெருக்களுக்கு, குடிநீர் வழங்கும் குழாய் செல்கிறது.

இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, நேற்று காலை முதல் ராதாகிருஷ்ணன் சாலையில் குடிநீர் கசிந்து வந்தது. இதில், பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணானது.

குழாய் உடைப்பை கண்டறிந்து, குடிநீர் வாரியம் சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement