குட்டையில் தனிநபர் ஆக்கிரமிப்பு போலீஸ் உதவியுடன் அகற்றம்
ஒட்டியம்பாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒட்டியம்பாக்கம். இங்கு, 90 சென்ட் பரப்பளவு உள்ள வெட்டியான் எனும் குட்டை அமைந்துள்ளது.
இதனருகில், ரவி என்பவரின் நிலம் உள்ளது. எனவே, குட்டையின் பழைய சர்வே எண்: 73/1, புதிய சர்வே எண்: 313/3 என்பதை, தனது நிலமென கூறி, குட்டையில் மண்ணை கொட்டி, இரு ஆண்டுகளாக ஆக்கிரமித்து அனுபவித்து வந்துள்ளார்.
இதையறிந்த ஊராட்சி தலைவர் மற்றும் செயலர் கேட்டதற்கு, ரவி இது எனது நிலம் எனக்கூறி ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்துள்ளார்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் மற்றும் தலைவர் ஒன்று கூடி, நேற்று முன்தினம் பெரும்பாக்கம் போலீசார் உதவியுடன் சென்று, ஆக்கிரமிப்பை அகற்றினர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, 'வட்டாட்சியர் உத்தரவின்படி, குறிப்பிட்ட குட்டையை துார்வாரி, சுற்றுசுவர் அமைக்கப்படும்' என, தெரிவித்தார்.