கார் மோதி தொழிலாளி பலி கிளியனுார் அருகே சோகம்

வானுார் : கிளியனுார் அருகே கார் மோதிய விபத்தில், பைபாஸ் சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஒப்பந்த தொழிலாளி இறந்தார்.
புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், சென்டர் மீடியனில் செடிகள் நடப்பட்டு, மொரட்டாண்டி டோல்கேட் நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த செடிகளுக்கு, தனியார் வாட்டர் நிறுவனம் ஒப்பந்தம் மூலம் டிராக்டரில் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.
நேற்று தனியார் வாட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் புளிச்சப்பள்ளம் பகுதியை சேர்ந்த தனக்கோடி டிராக்டர் ஓட்டிக்கொண்டும், கொந்தமூர் காலனியை சேர்ந்த தெய்வநாயகம், 54; பின்புறமாக அமர்ந்து செடிகளுக்கு ஊற்றியபடி சென்றார்.
காலை 11:00 மணிக்கு, தைலாபுரம் அருகே தனக்கோடி டிராக்டரை சென்டர் மீடியன் ஓரம் நிறுத்தி தெய்வநாயகம் கீழே இறங்கி தண்ணீர் ஊற்றினார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற சுசூகி கார் சென்டர் மீடியனில் மோதி, தெய்வநாயகத்தின் மீது மோதியது.
இதில், தெய்வநாயகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் காரில் இருந்த ஏர் பலுான் விரிந்ததால் காரை ஓட்டிச்சென்ற புதுச்சேரி, கவுண்டம்பாளையம் ரபிக், 42; என்பவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா
-
கிடப்பில் சிவகாசி வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டுமானப்பணி பட்டாசு உற்பத்தியாளர்கள் அதிருப்தி
-
மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு வாழ்நாள் சிறை
-
கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்
-
தம்பட்டம் அடிக்க கோவில் கும்பாபிஷேகம்; ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்
-
'கொடை'யில் தொடர் மழை