பகுதி நேர ரேஷன் கடை அமைச்சர் திறந்து வைப்பு

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் காலனியில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.

கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் சவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் அந்தோணிராஜ், வட்ட வழங்கல் அலுவலர் ராமர், பொது வினியோக திட்ட சார் பதிவாளர் சுப்ரமணியன், நல்லுார் கள அலுவலர் புகழேந்தி முன்னிலை வகித்தனர்.

வெண்கரும்பூர் கூட்டுறவு சங்க செயலர் சுப்ரமணியன் வரவேற்றார்.

அமைச்சர் கணேசன், பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில், தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவதியாகராஜன், மாவட்ட பொறியாளர் அணி செம்பியன், கூட்டுறவுத்துறை வளர்ச்சி அலுவலர் கலையரசன், எழுத்தர் பன்னீர்செல்வம், விற்பனையாளர்கள் ரமேஷ், பாக்கியலட்சுமி செல்வக்குமார் பங்கேற்றனர்.

Advertisement