வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு

விருத்தாசலம் : புதுக்கூரைப்பேட்டையில் வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு செய்தனர்.

தஞ்சாவூர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் கிராமப்புற மதிப்பீடு செய்தனர்.

இதன் மூலம், கிராமத்தில் விவசாயிகள் எதிர் கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை, கல்வி விகிதம் குறித்து, வண்ண கோலமிட்டு கிராம மக்களுக்கு விளக்கினர்.

மாணவர்கள் லோகேஷ்வரன், நவீன்குமார், நைஜில் ஜேசன், முகேஷ் கோமதி, பரந்தாமன், பிரவீன் குமார், ராகுல்பாரதி, ரோகித் சேதுபதி, சச்சின், சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement