தி.மு.க., பொறியாளர் அணிக்கு நேர்காணல்  

சிதம்பரம் : சிதம்பரத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி பதவிகளுக்கான நேர்காணல் கூட்டம் நடந்தது.

கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணிக்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் பகுதி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேர்காணல் கூட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்தது.

அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, நேர்காணல் நடத்தினார். மாநில பொறியாளர் அணி தலைவர் துரை சரவணன், துணை செயலாளர் பிரதீப், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், பாலமுருகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், இளங்கோவன் பங்கேற்றனர்.

Advertisement